என்னைப்பற்றி

என்னுடைய அனுபவ ஆற்றலும் என் குரு ஸ்ரீ வடபழனி சித்தர் எனக்குப் போதித்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நவபாஷாணம் எனும் ஓர் ஒப்பற்ற மருத்துவ கலவை மூலம் உலகத்திற்கே சவால் விடும் பல தீராத நோய்களிலிருந்தும் மக்கள் விடுபட வேண்டும் என்று எனது குருவின் எண்ணக் கோள்களை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதே எனது லட்சியம். இதற்காக நான் பட்ட துன்பம் ஏராளம், மற்றும் உண்மை நண்பர்கள் பின் சதி இதை எல்லாம் தாண்டி அப்பாற்பட்ட நிலையில் என் குருவின் பாதையில் சென்று இந்த ஒரு நவபாஷாண மருத்துவ கலையை இந்த நூலின் மூலமாக பகிர்ந்து கொள்கிறேன்.

நவபாஷாணம் கூட்டுவது ஒரு அறிய கலை. இந்த மருத்துவ கலவையை நல்வழியிலேயே செயல்படுத்தினால் மட்டும் இதில் சாதிக்க முடியும். இது எச்சரிக்கை என என்ன வேண்டாம் . நான் என் வாழ்க்கையில் என் அனுபவத்தில் நான் கற்றுக் கொண்டது. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு என்று சொல்வது போல் மனம் ஒரு நிலை அடைந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும்.

நவபாஷாணங்களான, வீரம், பூரம், தாளகம், மனோசிலை, விங்கம், ரசம், கெந்தி, வெள்ளைபாஷாணம், மிருதார்சிங் என்கின்ற ஒன்பது வகை பாஷாணங்களுடன் தொன்னூற்றி ஒன்பது மூலிகைகள், இளவன்ங்கள், பட்டைகள், சாறுகளைக் கலந்து இதனுடன் குருமூப்பு, துருசு சுண்ணம் என்கிற சுன்னக் கலவையைம் இணைத்து உருவாக்கியது நவபாஷாணம்.

பிரபஞ்சம், தன் இயக்கத்தில் பிசுகாமல் இயங்கக் காரணமாக விளங்குவது ஈர்ப்பு விசை. ஈர்ப்பு விசைதான் கோள்கள் ஒன்றோடொன்று தொடர்ந்தவாறு சஞ்சாரம் செய்ய உதவுகிறது. இதே போன்ற ஈர்ப்பு விசை தான் புவியில் உள்ள உயிர்களின் உடலையும் மண்ணையும் பிணைத்து உள்ளது நம் உடலின் உள்ளுறுப்புகள் சுவாசம், நீர், உணவு, உடலில் படும் ஒளி, பருவநிலை ஆகிய இவைகளின் இயக்கத்திற்கு ஏற்ப தன்மைச் சுவாசம், நீர், உணவு, உடலில் படும் ஒளி, பருவநிலை ஆகியவற்றில் மாறுதல் ஏற்படும் போது, உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கத்தில் ஏற்படும் தடுமாற்றத்தின் அளவே நோய். இத்தகைய நோயை விரட்ட தடுமாற்றம் குறைக்க பேருதவி புரிவதே போகரின் நவபாஷாணம்.கடவுளை காக்கும் பொருளாகவே மக்கள் உணர்த்துள்ளனர்.உடல் நலனையும் ,மனநலமையும் பேண கதிரலைகளாகவும் மனநலன் மேம்பட்டு ஞானநிலை எய்த கருப்பொருளாகவும் விளங்கும் வகையில் போகர் சித்தர் நவபாஷாணத்தால் பழனியில் தண்டாயுதபாணியாய் ஆயக்குடியில் அமைத்தார் .

முதுபெரும் புலவர் , புதுவை ஞானி ஈழத்து பிரம்ம ரிஷி அறிந்தார்க்கினியனார்அவர்களின் சீடர் எனது குரு கோபாலகிருஷ்ணன் (எ) ஸ்ரீ வடபழனி சித்தர் அவர்களிடம் சிறு வயதிலிருந்தே சீடராக சித்த வைத்திய முறைகளை கற்றுக்கொண்டேன் .ஸ்ரீ வடபழனி சித்தர் அவர்கள் சித்த மருந்துகளைச் செய்து பல நோயாளிகளைக் குண படுத்தியதுடன் நவபாஷாணங்களையும் மூலிகைகளையும் கூட்டி நவபாஷாணக்கட்டு முறையில் தண்டாயுதபாணி சிலையை வடித்து அதை அஸ்தினாபுரத்தில் ஸ்ரீ நவபாஷாண தண்டாயுதபாணிக்கு திருக்கோவில் அமைத்தார் .

இச்சமயம் எனது குருவுடன் இருந்த நான் நவபாஷாணக்கட்டு முறையை கற்றுக்கொண்டேன் .இந்த நவபாஷாணக் கட்டு முறையை கற்றுக்கொண்டேன் .இந்த நவபாசக்கட்டு மூலம் பல் வேறு நோய்களை குணப்படுத்த முடியும் .மேலும்மதுராந்தகத்தை சேர்த்த எனது தாத்தா மறைத்த திரு . பாலு நாயக்கர் அவர்கள் பரம்பரை சித்த வைத்தியர் ஆவார்.அவர்களிடம் இருந்து சித்த வைத்திய முறையினையும் ,இவ்வாறு என் குருவிடம் இருந்தும் ,எனது தாத்தா விடம் கற்றுக்கொண்ட சித்த வைத்திய முறையினை அனுபவ ஆற்றலினால் நான் எனது குருநாதர் கூட்டிய பாஷாண கட்டு முறையினை பின்பற்றி பாஷாணக்கட்டை கட்டுகிறேன்.

எனது குரு 25 வருடத்திற்கு முன்பு இரண்டு அடி உயரமுள்ள நவபாஷாண கட்டு முறையில் சென்னை குரோம்பேட்டை அருகில் உள்ள அஸ்தினாபுரம் வடக்கு மசூதி தெருவில் நவாப்ஸான தண்டாயுத பாணிக்கு திருக்கோவில் அமைத்தார் .கடந்த எட்டு வருடத்திற்கு முன் குரு சமாதிநிலை அடைந்தார் .அவரின் வழித்த்தோன்றலே நான் .எனது குருநாதர் சிலை சிதலமடைத்ததையும் கோவில் மறுசீர் அமைக்க ,எனது நிஷ்டையில் தோன்றி சொன்னதன் கீழ் குருநாதர் செய்த 2 அடி உயர சிலையினுடன் , பல மூலிகைகள் பாஷாணங்கள் சேர்த்து அதை 4 அடி உயரமுள்ள சிலையாக செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு தகவல் கொடுத்தபின் அந்த சிலையை பக்க்தர்களின் பார்வைக்கு வைத்தேன் .அந்நிலையில் நான் செய்த சிலையினை வேண்டத்தகாத நபர்கள் உடைத்து விட்டார்கள் .

அதையடுத்து 5 -2 -2014 அன்று மீண்டும் 3 அடி உயரமுள்ள சிலையை செய்து திருப்பணியயை முடித்தேன். பாஷாணங்களை அதன் விஷத்தன்மைகளை நீக்கி பாஷாணத்தின் மருத்துவ குணம் மாறாமல் வீரியம் மாறாமல் கூட்ட முடியும். வீரம், பூரம், மிருதார் சிங், தாளகம், மனோசிலை, கெந்தி, பாதரசம், வெள்ளை பாஷாணம், லிங்கம் இவைகள்தான் ஒன்பது வகை பாஷாணங்கள் ஆகும்.

இவற்றை அதன் தன்மைக்கு ஏற்றபடி சம அளவில் மூலிகைகளின் சாறுகளுடன் 48 நாட்கள் சாரணை செய்து பின் மூலிகை சாறு விட்டு அரைத்து 21 நாட்கள் இதே போல் செய்து வெயிலில் காய வைத்து மீண்டும் மீண்டும் காய வைத்து களிமண்ணில் (மோல்ட்) செய்து உருக்கி சிலை வடித்து வரட்டியில் புடமிட சிலை உருவாகும். நவபாஷாண சிலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஓசோன் படலம் சிலை மீது படும் நேரம் லண்டன் கீரின் வீச் நேரப்படி உலகத்திற்கு சூரியன் உதயம் ஆகும். இச்சமயத்தில் சிலையின் மீது படும் ஓசோன் படலம் சூரிய ஒளி கதிர் இரண்டும் ஒன்று சேரும் போது சிலையில் இருந்து தாய் நீர் உருவாகும்.

இந்த நீரே எல்லாவிதமான கொடிய நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. மற்றும் இச்சிலை முன்பு உட்கார்ந்தாலே மனம் ஒரு நிலை அடையும், தூய்மை அடையும். மேலும் இச்சிலை இருக்கும் இடத்தில தீய சக்திகள் விலகி நம்மை உண்டாகும். எனவே நவபாஷாண சிலை குறித்த அணைத்து நன்மைகளையும் உலக மக்கள் நலம் பெற வேண்டி எழுதுகிறேன்.

மேலும் இந்த இணைய தலத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களும் எனது குருநாதரின் களஞ்சியத்திலிருந்தும் எடுத்ததே. நவபாஷாணம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தென் தமிழகத்தில் அமைந்துள்ள பழனி நவபாஷாணத்தால் உருவான போகர் சித்தர் உருவாக்கிய தண்டாயுதபாணி சிலை. சிலை மீது பட்டு திரும்பும் பஞ்சாமிர்தம் கொடிய நோய்களை தீர்க்கும் ஆறு மருந்தாகிறது. மற்றும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் போகர் சித்தர் உருவாக்கிய சிலை இந்நாள் வரை அதன் மருத்துவ தன்மையுடன் பக்தர்களுக்கு நோய் நொடி தீர்த்து பக்தர்களின் எண்ணங்களையும், உடல், மனம், ஆத்மா ஆகியவை தூய்மை அடைய வைக்கிறது. மேலும் நவபாஷாணத்தால் உருவான தண்டாயுதபாணி சிலை மீது பட்டு திரும்பும் காற்றானது மனதை ஒரு நிலை அடைய செய்கிறது.

நவபாஷாணம் என்னும் ஓர் மருத்துவ கலவையை எனக்கு போதித்த எனது ஆசான் ஸ்ரீ அறிந்தார்கினியனாரின் சீடர் கோபாலகிருஷ்ணன் (எ) ஸ்ரீ வடபழனி சித்தர் அவர்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன். எனது குரு எனக்கு போதித்த நவபாஷாணம் என்னும் அறிய மருத்துவ கலவையை எனக்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல் எல்லாரிடமும் சென்று அடைய வேண்டும் என்பது எனது குருவின் வேண்டுகோள்.

எனவே எனது குரு போதித்ததையும், நான் படித்ததையும் தங்களுடன் பகிர்ந்து கொண்டு இந்நூல் எழுதுவதற்கு உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் உள்ள திரு .கி .ராஜேந்திரன் பி.எ., காவல் துறை உதவி ஆணையர் அவர்களுக்கு நன்றி கூறி, எனக்குள் உள்ளத்தையும் பல பெரியோர்களின் சிந்தனைகளையும், அவர்கள் எனக்கு போதித்ததையும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.