நவபாஷாணம் என்றால் நம் நினைவுக்கு வருவது தென் பழனி, தமிழகத்திலேயே பழநியில் மட்டும் தான் நவபாஷாணத்தில் செய்த முருகன் சிலை உள்ளது. இதன் மீது செய்யப்படும் அபிஷேக பொருட்கள் மருந்தாகி நாள்பட்ட வியாதிகளையும் குணமாக்கும் என்பதையும் இதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போகர் சித்தர் செய்தார் எனத் தெரியும். பழநியில் போகர் செய்த ஒன்பது நவபாஷாணங்களை கட்டி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் செய்தது போலவே, நமது சென்னை மாநகரின் பூந்தமல்லியை ஒட்டி வடக்கு மலையம்பாக்கத்தில் (என்னூரிலிருந்து வண்டலூர் செல்லும் வழியில்) பைபாஸ் அருகே நவபாஷாண ராஜமுருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சிறப்பு அதன் ஒன்பது அடுக்கு கோபுரம் ஆகும்.

ஒவ்வொரு அடுக்குகளில் எட்டு திசை காற்றினை 72 துவாரம் வழியாக காற்றின் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகன் சிலை மீது பட்டு அங்கு வரும் பக்தர்களின் மீது படும்படி அமைந்துள்ளது. மேலும் பிரபஞ்ச சக்தியினை பெரும் வகையில் ஆண் மெய்யன்பதிகள் தனது மேல் சட்டை, பனியனையும் கழற்றி அச் சக்தியினை முழுமையாக பெறுகிறார்கள். அடுத்த சிறப்பு இந்த நவபாஷாண சிலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஓசோன் படலம் இதன் மீது படும் நேரம் லண்டன் கீரின்விச் நேரப்படி உலகத்திற்கு சூரியன் உதயம் ஆகும்.

அச்சமயத்தில் ஓசோன் படலமும், சூரிய ஒளியின் கதிர் இரண்டும் ஒன்று சேரும் சமயம் சிலையில் தாய் நீர் உருவாகும். இந்நீரே எல்லாவித கொடிய நோய்களை குணப்படுத்தவல்லது. இப்பெருமை கொண்ட சிலை ஆவுடையை ஆதாரபீடமாக கொண்டுள்ளது மிகச் சிறப்பு வாய்ந்தது.

இச்சிலை நவபாஷாண கட்டு என்பதால் ஒன்பது நவகிரகங்களை குறிக்கும் . ஆகவே இந்த ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகனை சுற்றி வரும் சமயம் நவகிரகங்களின் தோஷமும் விலகும் தன்மை உடையதாய் அமைகிறது. ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகன் செய்யும் அபிஷேக பொருட்கள் பால், சந்தானம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் மற்றும் பிரபஞ்ச காற்றும் மருத்துவ குணத்துடன் இருப்பது சிறிதும் ஐயமில்லை.

இத்திருக்கோயில் முகப்பில் நவசக்தி விநாயகர் மற்றும் வலதுபுறம் தட்ஷணாமூர்த்தி, வடபழனி சித்தர், வீரசி சாய்பாபா உள்ளனர். விநாயகரின் இடதுபுறத்தில் படியேறி சென்று ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகனையும் தரிசிக்கலாம். முருகனின் வாகனமான மயிலின் தோற்றமும் அதனூடே இரண்டு நாகங்கள் இருப்பதும் மிக விஷேசம். இந்த நவபாஷாண சிலை மக்களுக்காக இந்த ஆண்டு தைபூசம் (09 -02 -2017 ) அன்று சிறப்பாக கும்பாபிஷேகம் செய்யப்படுத்து. தொடர்ந்து மண்டல அபிஷேகங்களும் நடைபெற்றது. தொடர்ந்து மண்டல அபிஷேகங்களும் பூஜையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து மண்டல பூஜை 29 -03 -2017 அன்று நவகலச அபிஷேகங்களும், 108 சங்காபிஷேகம் மூல மந்தர ஹோமங்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகன் இங்குவரும் மக்களின் தோஷங்களை நீக்கி சந்தோஷங்கள் அருள்ளிபாலிகிறார். மேலும் இத்தனை சிறப்பான இக்கோயில் ஸ்ரீ வடபழனி சித்தரின் நேரிடையான சீடர் கு.ரமேஷ் குமார் மக்களின் நலனுக்காக உருவாக்கி உள்ளார்.

மேலும் வார வியாழக்கிழமைகளில் மதியம் வடபழனி சித்தருக்கு பக்தர்களின் திருக்கரங்களால் பால் அபிஷேகம், செய்து பின் பூஜை செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

அச்சமயம் அபிஷேகப்பால் மற்றும் அபிஷேக மூலிகை தீர்த்தம் வழங்கப்படுகிறது. இதனை அருந்துவதால் நோய் எதிர்ப்பினை பெறுகிறோம்.

இங்கு குரு அருளுடன் திரு அருளும் சேர்ந்து நம் மன எண்ணங்கள் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களை செயல்படுத்தப்படுகிறது .